பெண்கள் எந்த மாதத்தில் கருத்தரிக்க வேண்டும்?: அமெரிக்க மருத்துவர்கள் வெளியிட்ட ஆய்வு தகவல்
திருமணமான பெண்கள் எந்த மாதத்தில் கருத்தரித்தால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என 12 வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த அமெரிக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் பெண்கள் கருத்தரிக்க ஆரோக்கியமான மாதம் எது என கடந்த 12 மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். சுமார் 5 கோடி கர்ப்பிணி பெண்களிடம் நடத்திய ஆய்வில், ‘டிசம்பர் மாதத்தில் கர்ப்பமாகும் பெண்களே சிறந்த முறையில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக’ தெரியவந்துள்ளது. இது குறித்து குழந்தைகள் மருத்துவரான பால் வின்செஸ்டர் கூறுகையில், டிசம்பர் மாதத்தில் பெண்கள் கருவுற்றால், அதற்கு அடுத்தடுத்து வரும் கோடை காலங்களில் வெளியாகும் சூரிய ஒளியிலிருந்து vitamin D சத்துக்கள் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் கிடைக்கும். ”வைட்டமின் டி” வயிற்றில் உள்ள குழந்தைக்கு அவசிய தேவையாகும். பின்னர், டிசம்பர் மாதத்தில் கருவுற்று செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறக்கும்போது காலநிலை மிகவும் குளிராகவும் இல்லாமல் வெப்பமாகவும் இல்லாமல் மிதமாக இருப்பதால், அது குழந்தை ஆரோக்கியமாக வளர பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நேரடியாக கோடைக்காலங்களில் பெண்கள் கருத்தரிக்க கூடாது. ஏனெனில், அந்த காலநேரத்தில் காற்றில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் கலந்து இருக்கும் என்பதால், அவை கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும், செப்டம்பர் மாதத்தில் பரவலாக புதிதான உணவு வகைகள் அறுவடை செய்யப்படுவதால், அப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலம் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல், இந்த காலநிலைக்கு அடுத்து கடும் குளிர்காலம் தொடங்கும் என்பதால், அதற்கு முன்னரே குழந்தைகள் ஓரளவு வளர்ச்சி அடைந்து அதனை தாங்கிக்கொள்ளும் திறனை பெறுவார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.