தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் பணி!!



தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் பணி



தமிழ்நாட்டில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III, இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுருக்கெழுத்து-தட்டச்சர்-நிலை-III - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கலம் உயர்நிலை அல்லது தமிழ் உயர்நிலை, ஆங்கிலம் இளநிலை அல்லது தமிழ் இளநிலை, ஆங்கிலம் உயர்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,500 - 20,200 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,500 - 20,200 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: செயலாளர், மாநி மனித உரிமைகள் ஆணையம், எண்.143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 23.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.10.2015


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad