என் காதல் மனைவியை சந்தித்த தருணம்- முதன் முறையாக மனம் திறந்த விக்ரம்
இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இவர் நடிப்பில் நேற்று 10 எண்றதுக்குள்ள படம் திரைக்கு வந்தது.இப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகாக ஒரு தொலைக்காட்சியில் விக்ரம் கலந்து கொண்டார். இதில் பேசிய விக்ரம் தன் காதல் மனைவியை பற்றி முதல் முதலாக பேசியுள்ளார்.இவர் பேசுகையில் ‘நான் என் மனைவியை முதன் முதலாக பார்த்த போதே, சினிமாவில் காட்டுவது போல் பல்ப் எல்லாம் மனதிற்குள் எரிந்தது. அவர் அப்போது சைக்காலஜி படித்து வந்தார்.என்னிடம் நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார், நான் வேலையே பார்க்க வில்லை என்றேன், அவர் என்னை பற்றி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, பிறகு எங்களுக்குள் அப்படியே பேசி, பழக காதல் மலர்ந்து விட்டது’ என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.