எம்.பி.ஏ. படிப்பை ஆன்லைனில் மேற்கொள்ளலாமா?
எம்.பி.ஏ. படிப்பை ஆன்லைனில்
மேற்கொள்ளலாமா?
ஆன்லைனில் எம்.பி.ஏ. படிப்பது
குறித்து பலவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, ஆன்லைன் எம்.பி.ஏ. பற்றி எதிர்மறையானதாகவே
இருக்கிறது.
அவை, முழுநேர எம்.பி.ஏ. படிப்பைப் போன்று
சிறந்தவை இல்லை என்றும், ஆன்லைன் படிப்பை யாரும் சீரியசாக
எடுத்துக்கொள்வதில்லை என்றும், அது ஒரு வேஸ்ட் என்றும்
பலவிதமான கருத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால், உண்மை நிலவரம் வேறுமாதிரியானது. ஆன்லைன்
எம்.பி.ஏ. படிப்பின் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், ஒருவர், ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்வதற்கு
முன்னதாக, சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஒருவர், ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பை ஆர்வமின்றி
படித்தாலோ, அதைப் படித்து முடித்துவிட்டு, என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனாலோ, ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு கட்டாயம் வீண்தான்.
ஒருவரின் பணி நிலை, கல்வித் தேவைகள், பணம்,
நேரம் மற்றும் தேர்ந்தெடுத்தப் படிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே,
ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ஆன்லைன் எம்.பி.ஏ. என்றால் என்ன?
ஆன்லைன் லெக்சர்கள், ரெடிமேட் படிப்பு உபகரணங்கள் மற்றும்
ஆசிரியர்களுடனான chats ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும்
ஒரு படிப்பாகும். எளிய அணுகல் மற்றும் நேர சேமிப்பு ஆகிய அம்சங்கள், இந்தவகை எம்.பி.ஏ. படிப்புகளை பலரும் விரும்புவதற்கு காரணமாகின்றன.
வேலை செய்துகொண்டே படிக்கும்
நிலையில் இருப்போருக்கு, ஆன்லைன் படிப்பு
மிகவும் ஏற்றது. இதன்மூலம், படிக்கும்போதே, பணி அனுபவத்தையும் பெற முடிகிறது.
ஆன்லைன் பட்டம் Vs முழுநேர பட்டம்
இது சிறந்ததா? அல்லது அது சிறந்ததா? என்ற விவாதம் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. பலர், ஆன்லைன் படிப்புகள் மதிப்பற்றவை என்று சொல்கிறார்கள். ஆனால், வேறுசிலர் அதற்கு மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். பணி
வாய்ப்புகள், அறிவை வளர்த்துக் கொள்ளுதல், ஆசிரியர்களுடன் நேரடியாக பேசுதல் மற்றும் பாடங்களை கவனித்தல், நேரடியான கல்லூரி வாழ்க்கை, சக மாணவர்களுடன் பழகி,
அவர்களின் கருத்துக்களையும் அறிவது, சந்தேகங்களை
அவ்வப்போது ஆசிரியர்கள் மூலமாக நிவர்த்தி செய்துகொள்வது உள்ளிட்ட பலவிதமான வசதிகளை
ஒப்பிடும்போது, நேரடி எம்.பி.ஏ. படிப்பானது, மதிப்புவாய்ந்த ஒன்றுதான்.
மேற்கண்ட வசதிகளும், வாய்ப்புகளும் ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பில்
இல்லைதான். ஆனால், அதேசமயத்தில், நேரடி
எம்.பி.ஏ.,வுடன் ஒப்பிடுகையில், ஆன்லைன்
எம்.பி.ஏ. மிகவும் பின்தங்கியதல்ல.
நேரடி எம்.பி.ஏ. படிப்பவர்கள், பணியைப் பற்றியும், நிறுவனங்களைப்
பற்றியும் தியரி முறையிலும், பிறர் சொல்வதைக் கேட்டுக்
கொண்டிருக்கையில், ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பவரோ, நேரடி பணி அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்.
முழுநேர எம்.பி.ஏ. படிப்பிற்கு
ஆகும் செலவைவிட, ஆன்லைன்
படிப்பிற்கு குறைந்த செலவுதான். மேலும் ஆன்லைனில் எம்.பி.ஏ. படிப்பவர்கள், சந்தை நிலவரங்கள் மற்றும் அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தெளிவுடன்
இருப்பார்கள். ஆனால், இந்த வாய்ப்புகள், கல்லூரியில் நேரடியாக சென்று எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு வாய்க்காது.
ஆனால், ஏற்கனவே சில ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று,
பின்னர் நேரடி எம்.பி.ஏ. சேர்ந்து படிப்பவர்களின் நிலை சற்று
வேறானது.
ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பின் சாதகங்கள்
* முழுநேர
எம்.பி.ஏ. படிப்பை ஒப்பிடுகையில், ஆன்லைன் படிப்பிற்கான
செலவு மிகவும் குறைவே.
* தினமும்
கல்லூரிக்கு சென்று வரக்கூடிய நேரம் மிச்சமாகிறது மற்றும் பயண அலுப்பும்
இருப்பதில்லை.
* வேலை வாய்ப்பை
அதிகரிக்கும் அதேநேரத்தில், ஒருவரின் திறமையையும், ஆன்லைன் எம்.பி.ஏ. அதிகரிக்கிறது.
* முழுநேர
எம்.பி.ஏ. படிப்பிற்கு சேர்க்கை பெறுவதில் நிலவும் பல நடைமுறைகள், ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பிற்கு கிடையாது என்பதால், நாம்
வீண் சிரமத்தை தவிர்க்கலாம்.
பாதகங்கள்
* சக மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, கருத்துக்களைப்
பகிர்ந்து, சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் வாய்ப்புகள்
அடிக்கடி கிடைக்காது.
* பாடத்திட்டங்கள் ஒரேமாதிரியானவையாக இருந்தாலும், நேரடி
படிப்பு மற்றும் ஆன்லைன் படிப்பு ஆகியவற்றுக்கான உழைப்பு வித்தியாசப்படுகிறது.
எனவே, நேரடி எம்.பி.ஏ. அளவிற்கு, ஆன்லைன்
எம்.பி.ஏ. கருதப்படுவதில்லை.
* ஆன்லைன்
எம்.பி.ஏ. படிப்பு, ஒரு வாரத்தில், குறிப்பிட்ட
அளவிலான மணிநேரங்களை, மாணவர்கள், படிப்பிற்காக
செலவழிக்க வேண்டிய தன்மையைக் கொண்டவை. எனவே, முக்கியமான
மற்றும் பிசியான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, படிப்பிற்கு
தேவையான நேரத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.
* மேலும், வேலைவாய்ப்பு என்று வரும்போது, ஆன்லைன் எம்.பி.ஏ.
படித்தவர்களை விட, முழுநேர எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு
கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது.
ஏன் ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு?
நேரடி எம்.பி.ஏ. படிப்புஇ
பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பு அல்லது ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு ஆகிய அனைத்துமே, ஒருவரின் மேலாண்மைத் திறனையும், வணிக அறிவையும் மேம்படுத்துபவைதான். ஆனால், நாம்
எந்த முறையில் படிக்கிறோமோ, அப்படிப்பை எப்படி பயனுள்ள
முறையில் உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.
ஏற்கனவே பணிபுரிந்து
கொண்டிருக்கும் ஒருவர், தனது
திறன்களையும், வாய்ப்புகளையும் அதிகப்படுத்திக் கொள்ளும்
வகையில், ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ளலாம். ஆன்லைன்
எம்.பி.ஏ. படிப்பைப் பொறுத்தவரை, முக்கியமானது எதுவெனில்,
எந்தக் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்கிறோம் என்பதுதான்.
ஒருவர், ஆன்லைன் எம்.பி.ஏ. மேற்கொள்ளும்போது,
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரம் பெற்றதா? மற்றும் நாம் மேற்கொள்ளப்போகும் படிப்பும் அங்கீகரிக்கப்பட்டதா? என்பதை நன்கு உறுதிசெய்த பிறகே, படிப்பில் சேர
வேண்டும். அதுதான், இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டிய முதல்
அம்சம்.
ஆன்லைன் எம்.பி.ஏ. மேற்கொள்ளத்தக்க சில கல்வி நிறுவனங்கள்
* MIT School of distance education
* Welingkar Management Institute
* Symbiosis centre for distance learning
* Welingkar Management Institute
* Symbiosis centre for distance learning