தூங்காவனம் இசை வெளயீட்டு விழாவில் சிம்புவை கிண்டல் செய்த பாண்டிராஜ்
பாண்டிராஜ்-சிம்புவின் பிரச்சனை எப்போது தான் தீருமோ தெரியவில்லை. அதை இப்படி ஒரு பொது மேடையில் பாண்டிராஜ், சிம்புவை கிண்டல் செய்து காட்ட வேண்டுமா? என்று அனைவரையும் கேட்க வைத்துள்ளது.தூங்காவனம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டிராஜ் ‘சிம்பு தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவார், உடனே ஏன் இப்படி தாமதமாக வருகிறீர்கள் என கேட்டேன்.அதற்கு அவர் நடிப்பு போரடித்து விட்டது என்றார். அதற்கு நான் கமல் சாரை விட அதிகமா என்றேன்’ என அவர் கூற அவர்களுக்கு மறைந்திருக்கும் சண்டை தற்போது வெளிப்படையாகி விட்டது.