தன் வாழ்க்கை படம் - இயக்குநரிடம் தோனி வேண்டுகோள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை இப்போது இந்தியில் தோனி என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. இதில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார், அவரது மனைவி சாக்ஷியாக கியாரா அத்வானி நடிக்கிறார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகுகிறது. இந்தச்சூழலில், இயக்குநர் நீரஜ் பாண்டேவிடம் தோனி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது வாழ்க்கை படத்தில் நெருக்கமான காட்சிகள் எதுவும் வைக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். தோனியின் வாழ்க்கை படமாக இருந்தாலும், தோனியின் வாழ்வில் தீபிகா படுகோனே, லெட்சுமி ராய் போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதனால் இதுபோன்ற காட்சிகள் எல்லாம் வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.