ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!
மும்பை: மும்பையில் மகாரஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ் தாக்கரேவை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.மும்பையில் உள்ள மகாராஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ் தாக்கரே இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின்போது, மும்பையில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் உடன் இருந்தார்