விஷால், சரத்குமார் பிரச்னைக்கு வரலட்சுமி தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது







நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துப் போய்க்கொண்டிருக்கும் தருவாயில் சரத்குமாருக்கு விஷால் மீது ஏன் இவ்வளவு கோபம்? கிரிமினல் வழக்குப் போடும் அளவிற்கு அப்படி என்ன விஷால் செய்தார்? என்ற கேள்விகள் எழும்.  இதற்கு வரலட்சுமியுடன் விஷாலுக்கு உள்ள நட்பு ஒரு காரணமாக இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் விஷால் பதிலளித்துள்ளார்.  அவர் கூறுகையில், அவர்கள் ஜாதி அடிப்படையில் என்னைப் பேசியது தான் என்னை மிகவும் மனசங்கடத்திற்கு ஆளாக்கியது. இந்தப் பிரச்னை என் வாழ்நாளின் சாதாரண பழக்கங்களுக்கும் இடையூறாகவே மாறியுள்ளது. ஜிம்முக்குச் சென்று பல நாட்கள் ஆகி விட்டன. நிறைய தடவை என்னால் ஷூட்டிங்கில் கூட கலந்துகொள்ள முடியவில்லை. மேலும் வரலட்சுமியின் நட்புக்கும்  இதற்கும் சம்மந்தமில்லை.நாங்கள் இருவரும் நல்ல பக்குவநிலையில் உள்ளோம், எங்களது நட்பை இது கண்டிப்பாக பாதிக்கவும் செய்யாது என்று சொல்லியிருக்கிறார்.நல்ல விஷயங்களுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும் கூறினார்.  சிம்பு உங்களைப் பற்றி கொஞ்சம் காட்டமாகப் பேசினாரே என்ற கேள்விக்கு, இதற்கு நான் எந்தப் பதிலும்  சொல்ல முடியாது. நானும் அவர் பேசியதைப் பார்த்தேன். சிரிப்பு மட்டுமே எனது பதில். இதில் அவரை நான் போலியாக சித்தரிக்கவும் விரும்பவில்லை. அது அவருடைய பார்வையின் வெளிப்பாடு. மேலும் நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.  இதில் வரலட்சுமியை இழுப்பதற்கு அவசியமும் இல்லை என திட்டவட்டமாகவே கூறியுள்ளார் விஷால் 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad