சிரஞ்சீவியை சீண்டி மாட்டிக்கொண்ட விஜயசாந்தி!
ஆந்திரா-தெலுங்கானா பிரிவினை வரையிலும் பரபரப்பாக இருந்துவிட்டு சமீபகாலமாக சினிமா மற்றும் அரசியல் வாழ்கையில் தலைமறைவாக இருந்த விஜயசாந்தி மறுபடியும் லைம்லைட்டிற்கு வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக மெகா ஸ்டார் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். மறுபடியும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும், அதே சமயம் இனிவருபவை இதுவரை தனது சினிமா வாழ்க்கையில் ஏற்று நடிக்காத கதாபாத்திரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ருத்ரமாதேவி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியில் எல்லாவற்றிற்கும் டிவிஸ்ட் வைக்கும் விதமாக சிரஞ்சீவி தற்போது படங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பிப் போய் உள்ளதாகவும்,அவரைப்போல் அவசரப்பட்டு படம் முடியும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவிக்கமாட்டேன் என ட்வீட் போட்டுவிட்டார். இதனால், கொந்தளித்து உள்ளது மெகா ஸ்டார் ரசிகர் வட்டம்.