மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்பெஷல் எடிஷன்
மஹிந்திரா நிறுவனம், மோஜோவைத் தொடர்ந்து, பண்டிகை கால வெளியிடாக, கஸ்ட்டோ ஸ்கூட்டரில் ஸ்பெஷல் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. டாப் வேரியன்டான VXல் மட்டும் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரில், புதிய 2 இரட்டை கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி டெக்னிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தவிர இந்த ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு, அதனுடைய இன்சூரன்ஸ் இலவசமாக செய்துதரப்படும் என்கிறது மஹிந்திரா. ARAIபடி, 63கி.மி மைலேஜ் கிடைக்கும் 109.6சிசி இன்ஜினைக் கொண்டுள்ள கஸ்ட்டோ, 8bhp பவரையும், 9nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் தமிழ்நாடு எக்ஸ் ஷோரும் விலை, வழக்கமான VX வேரியன்டின் விலையை விட 500 ரூபாய் மட்டும் அதிகரித்து, ரூ. 52,160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.