பாகுபலி இரண்டாம் பாகம் பற்றி சிறிய தகவல் வெளியாகியுள்ளது
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் வேளைகளில் படு பிசியாக உள்ளார் இயக்குநர் ராஜமௌலி. நடிகர்களில் எந்த மாற்றமும் செய்யபடாமல் முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் வருவார்கள் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இரண்டாம் பாகத்தில் பாலிவுட்டின் 'பியூட்டி குயின்' மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிகிறது. ராஜமௌலியின் இந்த முடிவுக்குக் காரணம் கரன் ஜோகர். பாகுபலியின் இந்தி பதிப்பை வெளியிட்டவர் இயக்குநர் கரன் ஜோகர். அது ஹிந்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற பாலிவுட்டின் பிரபலங்கள் யாரையாவது இப்படத்தில் நடிக்க வைக்க ராஜமௌலியிடம்,கரன் ரெகமண்ட் செய்ய இறுதியில் மாதுரியிடம் கேட்க உள்ளனராம். இப்படத்தில் அவர் அனுஷ்காவின் அக்காவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை மாதுரி இதற்கு மறுப்பு தெரிவித்தால், அவருக்கு பதில் வித்யாபாலனிடம் கால்ஷீட் கேட்கப்படலாம். பாகுபலியில் நடிக்க பெரிய பெரிய நடிகர்கள் பலர் தங்களது விருப்பத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில், தேடிவரும் வாய்ப்பிற்கு பியூட்டி குயின் ஓகே சொல்லுவரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.