புலி படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காதது ஏன்?
புலி படம் கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று திரைப்பட வரிசலுகைக்காக பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். அதனால் படத்துக்கு வரிவிலக்குக் கிடைக்கவில்லை. ஏன் வரிவிலக்கு கிடைக்கப்பெறவில்லை என்பதற்காக காரணமும் தற்பொழுது வெளியாகியுள்ளது. தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்த காரணங்கள் பின்வருமாறு, திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் உள்ளன. படத்தின் பாடல் காட்சிகள் மகளிரின் ஆடைகள் ஆபாசகாட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன. படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சிகள் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை அதிகமான வண்முறைக் காட்சிகள் படத்தில் உள்ளன. இரட்டை அர்த்த வசனங்கள், படம் முழுக்க மூடநம்பிக்கைகளுக்கு உயிர் ஊட்ட முனைந்திருப்பதால் வரி விலக்கிற்குத் தகுதியானது அல்ல. படத்தைப் பார்த்த வரிவிலக்குக் குழுவினரின் பரிந்துரை இவ்வாறு இருந்ததால்,சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான புலி திரைப்படம் கேளிக்கை வரி விலக்கிற்கு தகுதியானது அன்று என முடிவாகியிருக்கிறது.