நடிகர்சங்கம் படம் தயாரிக்கிறது?
நடிகர்சங்கத்தேர்தல் முடிந்து புதியஅணி பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறது. முதல்நிகழ்வாக மூத்தநடிகை சச்சுவுக்கு ஆயுட்கால்உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள்.நடிகர்சங்கத்துக்கு வருமானம் ஈட்டவும் சங்கத்தை பலப்படுத்தவும் ஏற்கெனவே பல திட்டங்களை வைத்திருப்பதாக நாசர்அணியினர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தத்திட்டங்களில் ஒன்று சங்கக்கட்டிடம் கட்டுவதற்காக திரைப்படம் தயாரிப்பது. அதைச் செயல்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அந்தப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படத்தில் நடிப்பவர்கள் சம்பளம் வாங்காமல் நடிப்பார்கள் என்றும் படவியாபாரத்தில் வருகிற இலாபம் மொத்தமும் நடிகர்சங்கக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதற்கான முதல்கட்ட வேலைகளைச் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டார்களாம். ஓரிரு வாரங்களில் அது தொடர்பான அறிவிப்பு வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.