விஜய் வீட்டில் ரெய்டு உண்மையான காரணம் வெளிவந்தது
இளைய தளபதி விஜய் படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த முறை ரெய்டு என்ற பெயரில் புலி படத்தில் ஒரு தலைவலி வந்து நின்றது.எல்லோரும் இதை மாநில அரசு செய்கிறது என கூற, தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று இந்த வாரம் ஒரு கட்டுரையில் அதிர்ச்சி தகவல் ஒன்றை அளித்துள்ளது.மத்தியில் ஆளும் கட்சி ஒன்று தென்னிந்திய சினிமா நடிகர்களை தன் பக்கம் இழுக்க பல திட்டங்களை செய்து வருகின்றது. இதில் கமல்ஹாசன் கூட இணைந்தார். ஆனால், ரஜினி ஒரு போதும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறி விட்டார்.இந்நிலையில் விஜய்யை தங்கள் பக்கம் வரும்படி அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். விஜய், தற்போதைக்கு எனக்கு அரசியல் எண்ணம் இல்லை என கூற, நாளை படம் ரிலிஸ் ஆவதை அறிந்து வேண்டும் என்றே ரெய்டு அனுப்பியதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.