புலி கிளைமேக்ஸ் இதுதானா?
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து நாளை அமோக வரவேற்புடன் வெளிவரவிருக்கும் படம் புலி. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அரசியாக வரும் ஸ்ரீதேவிக்கும் விஜய்க்கும் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் முக்கிய கதையாக வருகிறது.நீங்க நல்லவங்க தான். ஆனா உங்களை சுற்றி இருப்பவர்கள் சரியில்லை. நீங்க திருந்தினால் போதும் என விஜய், ஸ்ரீதேவியிடம் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இயக்குனர் மறைமுகமாக அரசியலிலும் ஏதோ சொல்ல வருகிறார் போல.இறுதியில் விஜய்யின் நேர்மையை கண்டு “நீதான் இந்த நாட்டை ஆள வேண்டும்” என தன் கிரீடத்தை கழற்றி விஜய்யிடம் கொடுக்க, கிளைமேக்ஸில் ராஜாவாகிறார். இது கண்டிப்பாக விஜய் ரசிகர்களை பெரிதும் கவரும் என்பதில் சந்தேகமேயில்லை.