விஜய்-59 படக்குழுவினர்கள் அதிர்ச்சி
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் பாடல் பதிவு மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றது.சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று லீக் ஆகியுள்ளது. இதில் விஜய் எதிரிகளை அடிப்பது போல் உள்ளது.இச்செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ஏற்கனவே விஜய் நடித்த புலி படத்தின் டீசரை கூட ஒருவர் இப்படி லீக் செய்தது குறிப்பிடத்தக்கது. யார்? எதற்காக? இப்படியெல்லாம் செய்கிறார்கள் என படக்குழுவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்