500 கோல்கள் அடித்து ரொனால்டோ புதிய சாதனை
உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது ஸ்பெயினின் ரியல்மாட்ரீட் அணிக்காக விளையாடி வருகிறர். இந்நிலையில் நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில், ரியல்மாட்ரீட் அணி 2-0 என்ற கணக்கில் மால்மோ(சுவீடன்) அணியை வீழ்த்தியது. அந்த இரண்டு கோல்களையும் ரொனால்டோவை அடித்தார், இதன்மூலம் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். தனது நாடு மற்றும் கிளப் அணிகளையும் சேர்த்து மொத்தம் 753 போட்டிகளின் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி ரியல்மாட்ரீட் கிளப்பில் அதிக கோல்கள் அடித்த ரவுலை (323 கோல்கள்) சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.