2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கு துணையாக இருக்க போகும் ராகுல் டிராவிட்
இந்தூரில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கான டிரெஸ்சிங் ரூம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. ஏற்கனவே டி20 தொடர் தோல்வி மற்றும் முதல் ஒரு நாள் போட்டி தோல்வி போன்றவற்றால் இந்திய வீரர்கள் சோர்வுடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவின் முன்னாள் விரர் ராகுல் டிராவிட்டின் மானசீக ஆசி இந்திய வீரர்களுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய வீரர்களுக்கான டிரஸிங் ரூமின் பெயர் ராகுல் டிராவிட். எனவே அவரது பெயர் இந்திய அணியினரிடையே தாக்கத்தையும், மாற்றத்தையும், நல்ல உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ராகுல் டிராவிட் டிரஸ்ஸிங் ரூம் குறித்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளது. ராகுல் டிராவிட் கர்நாடகத்தில் வசிப்பவராக இருந்தாலும் அவர் பிறந்தது இதே இந்தூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.