தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உலகசாதனை படைத்த டோனி!
சர்வதேச டி20 வரலாற்றில் 50 போட்டிகளுக்கு தலைவராக செயல்பட்ட முதல் அணித்தலைவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் டோனி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்காவுக்கு 200 ஓட்டங்களை இலக்காக வைத்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி டோனி தலைவராக செயல்பட்ட 50வது சர்வதேச டி20 போட்டியாகும். இதன் மூலம் அவர் 50 சர்வதேச டி20 போட்டிகளுக்கு தலைவராக செயல்பட்ட முதல் அணித்தலைவர் என்ற உலக சாதனையை படைத்தார். இவரையடுத்து அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்டு (41 போட்டி), மேற்கிந்திய தீவுகளின் டேரன் சமி (39) ஆகியோர் அதிக போட்டிகளில் தலைவராக பணியாற்றி உள்ளனர்.