கமல் 16 கோடி பணம் கொடுத்தாரா வெளியானது உண்மை!









சமீபத்தில் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்த கமல் ஹாசன் அதில் சம்பளமாக வாங்கிய 10 கோடியை எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு கொடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகின.  அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டிற்கு வழங்கியுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களிலும், ஒரு சில இணைய தளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டன.  இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் திருமதி வினிதா சித்தார்த் கூறும்போது “அது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள் உருவாகியுள்ளன. ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும்.குழந்தைகள் ஏமாற்றம் அடைவர்.  அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகைகிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி விடும். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்” என்றார். "உதவி செய்யாட்டியும் பரவாயில்லை தவறான தகவலைப் பரப்பி உபத்திரம் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad