ZTE அறிமுகம் செய்யும் Axon Elite ஸ்மார்ட் கைப்பேசி






பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக மொபைல் சாதனங்களை உருவாக்கும் ZTE நிறுவனம் Axon Elite எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
Octa Core Qualcomm Snapdragon 810 Processor இனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 428 யூரோக்கள் ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad