இலவச WiFi !!!!!
இலவச WiFi
இந்தியாவில் கூகுள் நிறுவனம் 400 ரெயில்
நிலையங்களில் 'வை-பை' நெட்வோர்க்
வசதியை அமைக்கிறது.
இந்தியாவில் உள்ள சுமார் 100 ரெயில் நிலையங்களில்,
அடுத்த வருடம் இறுதிக்குள் ஒரு கோடி மக்கள் நெட்வோர்க் வசதியை
பெறும்வகையில் 'வை-பை' நெட்வோர்க்
வசதியை அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து
இத்திட்டம் மேலும் 300 ரெயில் நிலையங்களுக்கு கொண்டு
செல்லப்படும், இதுவே உலகின் பெரிய பொது 'வை-பை' நெட்வோர்க் சேவை வசதியாக இருக்கும் என்று
குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க சென்று உள்ள பிரதமர் மோடி ஜான்ஜோஸ் நகரில் மோடி
அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை
சந்தித்து பேசினார். அப்போது கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறுகிய காலத்துக்குள் 500 ரெயில்
நிலையங்களில் வை–பை வசதியை ஏற்படுத்துவோம். இதேபோல் 5 லட்சம்
கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை இணையதள சேவை விரிவுபடுத்தப்படும். என்று
தெரிவித்தார். பேச்சுவார்த்தையை அடுத்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
சுந்தர் பிச்சை தனது பிளாக்கில் வெளியிட்டு உள்ள தகவலில்,
“இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்கள் பணிகள் நெட்வோர்க் வசதியை வழங்க
உள்ளது என்பதை தெரிவிப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். கடந்த வருடங்களில் 100
மில்லியன் மக்கள் இந்தியாவில் முதல் முறையாக நெட்வோர்க் வசதியை
பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.” என்று கூறிஉள்ளார். இந்தியாவில் கூகுள் நிறுவனம் 400
ரெயில் நிலையங்களில் 'வை-பை' நெட்வோர்க் வசதியை அமைக்கிறது. அடுத்த 2016-ம் ஆண்டு
இறுதிக்குள் இந்தியாவின் மிகவும் பிஸியாக இருக்கும் சுமார் 100 ரெயில் நிலையங்களில் 'வை-பை' நெட்வோர்க்
வசதி அமைக்கப்படும்,
மிதம் இருக்கும் ரெயில் நிலையங்களிலும் அதனைத் தொடர்ந்து
விரைவில் சேவையானது ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். அதிகமான
பயனாளர்கள் மதிப்பில் இதுவே உலகின் பெரிய பொது 'வை-பை' நெட்வோர்க்
சேவை வசதியாக இருக்கும். நெட்வோர்க் வசதியானது தற்போது இந்தியாவில் மக்கள்
பயன்படுத்திவரும் வேகத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.