டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில வார்த்தைகள்........!
டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில
வார்த்தைகள்........!
வார்த்தைகள்........!
டீன் ஏஜ் பருவம், உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது. வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான்.
வாழ வேண்டிய எதிர்காலம் காத்திருக்க......டீன் ஏஜ் காதலால் கல்லறை பயணம் மேற்கொண்டு விடாதிருங்கள்.
இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள் ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள் ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட்/கேர்ள்ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம்.
'டீன் ஏஜ்'என்பது வசந்தகாலம் போன்றது. பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கூறுங்கள்.
பெற்றோருக்கும் உங்களுக்கும் நடுவில் திரை விழாமல், நட்புறவு இருந்தால்.... வெளியுலகில் எதிர்பால் நட்பு கிடைக்கும்போது, அது பாசமா? வேஷமா? என்று தெரியாமல், அதில் மூழ்கி உங்களை இழந்து விடாமல், தடுமாறாமல் இருக்க உதவும்.