Matrimony OTT-Platforms Jobs Coupons Business

Unemployed Youth Employment Generation Programme (UYEGP) NEEDS SCHEME

Unemployed Youth Employment Generation Programme (UYEGP)
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. பல்வேறு காரணங்களால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. International LabourOrganisation (ILO) வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2011-ஆம் ஆண்டு 3.5% சதவீதமும், 2012-ஆம் ஆண்டு 3.6 சதவீதமும், 2013 ஆம் ஆண்டு 3.7 சதவீதமும், 2014 ஆம் ஆண்டு 3.8 சதவீதமும், 2015 ஆம் ஆண்டு 4 சதவீதமாக அதிகரிக்கும் எனதெரிவிக்கிறது.


          படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிலில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programme)-படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம்) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை (Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.

இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (Unemployed Youth) தொழில் தொடங்குவதற்காக 15% சதவீதம் மானியத்துடன் (Subsidy) ரூபாய் 5 இலட்சம் வரை கடன் (Loan) வழங்கப்படுகிறது.

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் நோக்கம் (Objectives):
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்குவது.
தொழிலின் திட்ட மதிப்பு (Project Value):
§  உற்பத்தி சார்ந்த நிறுவனமாக (Manufacturing Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 5 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
§  சேவை சார்ந்த நிறுவனமாக (Service Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 3 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
§  வியாபாரம் சார்ந்த (Trading- Shop, Only sales Activity) நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 1 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
அரசு மூலதன மானியம்(Subsidies):
தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15% சதவீதத்தை மானியமாக (Subsides) அரசு அளிக்கிறது.
தொழில் முனைவோர் சொந்த முதலீடு(Entrepreneur Contribution of Capital Investment) :
§  பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத்(Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
§  சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment)தொழிலில் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு (Age Limit):
 விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினரை சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சிறப்புப் பிரிவினர்:
    மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், திருநங்கையர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் இத்திட்டத்தில் சிறப்பு பிரிவினர் ஆவர்.
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):
UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORTION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.


குடும்ப ஆண்டு வருமான வரம்பு (Family Income):
      UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்திற்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய்.1,50,000-க்குள் இருக்க வேண்டும்.
   UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் பயனாளிகளை மாவட்ட தொழில் மையம் (DIC-DISTRICT INDUSTRIES CENTER) தேர்ந்தெடுக்கிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI-ENTREPRENEUR DEVELOPMENT INSTITUTE) மூலம் ஒரு மாத கால தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி (EDP-ENTREPRENEUR DEVELOPMENT PROGRAME) வழங்கப்படும். பின்னர் UYEGP திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி பெற வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORTION)-க்கு பரிந்துரைக்கப்பட்டு, கடனுதவி பெற வழிவகைச் செய்யப்படுகிறது.
பாதிப்பு:
இதில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாத கால தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி (EDP-ENTREPRENEUR DEVELOPMENT PROGRAME) வரை process நேர்த்தியாக நடக்கிறது. அனால் நிதியுதவி தருவதில் மட்டும் இழுத்தடிக்கின்றனர். நிதியுதவி பெறவே 1 முதல் 2வருடங்கள் ஆகி விடுகிறது. இதனால் பலதரப்பட்ட இளைஞர்கள் பாதிபுக்குள்ளாகின்றனர். அந்த 2 கால வரையறையில் தங்கள் நம்பிக்கையை இழந்து துவண்டு விடுகின்றனர். இச்செயல்கள் எதிர்காலத்திலாவது நீடிக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad