இந்தியாவில், பெனெல்லி நிறுவனத்தின் பட்ஜெட் பைக்காக, TNT 25 பைக், நவம்பர் மாத இறுதியில் அறிமுகமாக இருக்கிறது. பைக்கின் தோற்றம், தனது போட்டியாளரான KTM DUKE 200ஐ நினைவுபடுத்தினாலும், தனித்துவமான டிஸைன் அம்சங்களைக் கொண்டுள்ளது பெனெல்லி TNT25 பைக்கில் இருப்பது 249.2 சிசி, 4 ஸ்ட்ரோக், ஃப்யூல் இன்ஜெக்டட், லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். இது 24.1 bhp சக்தியை 9,000 ஆர்பிஎம்-லும், 2.1 kgm சக்தியை 7,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது இந்த இன்ஜினில் 6- ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. சிக்னல்கள் நிறைந்த நகரச் சாலைகளில் ஓட்ட எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, குறைந்த ஆர்பிஎம்மில் பவர் டெலிவரி சிறப்பாக இருக்கும் வகையில் இன்ஜின் டியுனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைக்கின் எடை 150கிலோ தான் என்பதால், நீண்ட நேரம் ஓட்டினாலும் களைப்பு ஏற்படாது என நம்பலாம். ட்ரேல்லிஸ் சேஸியில், சாஃப்ட் செட்-அப் கொண்ட முன் பக்கம் 41 மிமீ அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் ப்ரேக்கிங் தேவைகளுக்காக, முன் பக்கம் 280 மிமீ டிஸ்க்கும், பின் பக்கம் 240 மிமீ டிஸ்க்கும் உள்ளன.16.5 லிட்டர் ஃப்யூல் டேங்க், நீண்ட தூரப் பயணங்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும். பைக்கில் 110/70 R17 & 140/60 R17 என்ற சைஸில் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கை, KTM DUKE 200 போல ஸ்போர்ட்ஸ் பைக்காக இல்லாமல், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய டுரிங் பைக்காக களமிறக்குகிறது பெனெல்லி. பைக்கை இங்கு அசெம்பிள் செய்து, பெனெல்லி விற்பனை செய்ய இருப்பதால், சவாலான விலையை பைக் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.
Bikes,upcoming,Upcoming vehicles