ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் கோஷ்டம் (Sassuria Lappa)
கோஷ்டம்(குஷ்டம்)
(Sassuria Lappa)
அமைப்பு
இது காஷ்மீரில் உள்ள கிணற்றுப்பகுதிகளில் மிகுதியாக வளரும். புரட்டாசி ஐப்பசி மாதங்களில் இதன் வேர்களை எடுத்து துண்டுகளாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இதில் இருவகையுண்டு. இளஞ்செடியின் வேர் இனிப்பாகவும், முற்றிய செடியின் வேர் கசப்பாகவும் இருக்கும். குக்குலுவைப் போல் சீன தேசத்தில் இதை நறுமணப் புகைபோடப் பயன்படுத்துகின்றனர்.
தன்மை
கார்ப்பு, இனிப்பு மற்றும் கைப்புச் சுவைகள் கொண்டது. உஷ்ண வீரியம் மிக்கது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். இலேசானது.
தீர்க்கும் நோய்கள்
வாத இரத்தம், அக்கி, இருமல், குட்டம், கபம் என்பனவற்றைப் போக்கும்.