ஹூண்டாய் கிரேடாவின் வரவினால் மாருதி நிறுவனம் மாருதி S-க்ராஸ்! விற்பனையில் விலையை குறைத்துள்ளது











தற்போது காம்பெக்ட் எஸ்யுவிகளில், ஹுண்டாய் க்ரெட்டா அதிகப்படியாக விற்பனையாவதால், மாருதி சுஸூகி நிறுவனம், தனது நெக்ஸா டிலர்ஷிப்களில் விற்கப்படும் S-க்ராஸ் காரின் விற்பனையை அதிகரிப்பதற்காக, காரின் விலையில் தள்ளுபடி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி டெல்லி,  NCR, குர்கான் மற்றும் சென்னையில் உள்ள நெக்ஸா டிலர்ஷிப்களில், ரு.20 ஆயிரம் தொடங்கி ரு. 1 லட்சம் வரை, காரின் விலையில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.  இந்த திட்டம், செப்டெம்பர் 30 வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது மாருதி. இவற்றில், பழைய மாருதி காரை எக்ஸ்சேஞ்ச் செய்து, S-க்ராஸ் 1.6 லிட்டர் DDiS 320 மாடலை வாங்கும் போது, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், 60ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை டிஸ்கவுண்டாக கொடுக்கப்படும். இதுவே 1.3 லிட்டர் DDiS 200 மாடலை வாங்கும் போது, ரூ. 20 ஆயிரத்தில் டிஸ்கவுண்ட் திட்டம் ஆரம்பிக்கிறது. தவிர , ரு. 11ஆயிரம் மட்டுமே செலுத்தி, காரை புக் செய்து விட்டு,  விரும்பும் வேரியன்ட் மற்றும் மாடலை, பின்னர் தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது மாருதி. இதனால், இந்த மாதத்திற்குள் S-க்ராஸ் காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைப்பது உறுதி எனத் தெரிகிறது.







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad