வர போகிறது ஆங்ரி பேர்ட்ஸ் படம்
சிறு குழந்தைகள் முதல், தாத்தா, பாட்டிகள் வரை அனைவரையும் கவர்ந்த ஸ்மார்ட் போன் விளையாட்டு ஆங்ரி பேர்ட்ஸ். இவ்விளையாட்டிற்காகவே ஸ்மார்ட் போன் வாங்கியவர்களும் உண்டு. தற்போது ஆங்ரி பேர்ட்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த, திரைப் படமாக வெளிவர உள்ளது. "தி ஆங்ரி பேர்ட்ஸ்" இதன் முதல் டிரெய்லர் வெளிவந்துள்ளது. ரெட் எனப்படும் கோபக்கார பறவை, அதைக் கட்டுப்படுத்த முயலும் ஆங்ரி பேர்ட்ஸ்கள் என கதை நகரவிருக்கிறதாம், ஹீரோவான ரெட்டுக்கு ஜாசன் சுதேய்கிஸ் என்பவரும், பக்கத்துக்கு வீட்டுக்காரராக வந்து ரெட்டை கோபப்படுத்தும் பிக் கதாபாத்திரத்திற்கு பில் ஹாடரும் குரல் கொடுத்துள்ளனர். ஒரு காலத்தில் உலகையே தனக்கு அடிமையாக்கி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் கேம் சீரிஸ்க்கு இப்போது ரசிகர்கள் குறைவாகிவிட்டனர். காரணம் நாளுக்கு நாள் வெளியாகும் ஆண்ட்ராய்டு கேம்கள், புதுப்புது அறிமுகங்கள் என ஆங்ரி பேர்ட்ஸ் சலித்துப் போய்விட்டது. இதை சரிகட்ட படமாக வெளியான ரியோ அனிமேஷன் பட கேரக்டர்களை தீமாகக் கொண்டு ஆங்ரி பேர்ட்ஸ் புது சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வேகமாக வளர்ந்துவரும் இணைய கேம் உலகைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது ஆங்ரி பேர்ட்ஸ் கொஞ்சம் பின்தங்கியது. 80 மில்லியன் செலவில் உருவாகும் இப்படம், ஆங்ரி பேர்ட்ஸ் கேம் இழந்த புகழை மீண்டும் தேடித் தரும் என, இவ்விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நம்புகிறார். 3டியில் மே 2016 இல் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.