Matrimony OTT-Platforms Jobs Coupons Business

காதலிக்க வைப்பது எப்படி???

காதலிக்க வைப்பது எப்படி???



இந்த காலத்துல ஒருத்தவங்க நட்பு சீக்கிரமா கிடச்சுடுது, ஆனா காதல்?. ஒரு பையனுக்கு பொண்ணையோ, ஒரு பொண்ணுக்கு பையனையோ பிடிச்சுப் போனா அதுக்கப்புறம் ஒருத்தர் மத்தவர இம்ப்ரெஸ் பண்ணி, ஸ்நேகமாகி, அவங்களுக்கு நம்மள புரிய வெச்சு, அதுக்கப்புறம் தயங்கித் தயங்கி ப்ரோப்போஸ் பண்ணி, அதுக்கு ரிப்ளை வந்து.... இப்படி பல கஷ்டங்களைத் தாண்டிப் போனாதான் ஒரு காதல் உருவாகுது. காதலிக்க வைக்கிறது எப்படி’ன்னு தெரிஞ்சுட்டா அதுக்கப்புறம் அது ரொம்ப ஈசி அப்டித்தானே?
ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது எப்படி? (இது பசங்களுக்கு)
பசங்க அகராதில காதலிக்கிறதுக்கும், கரெக்ட் பண்ணுறதுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசமாவது இருக்கும். “இந்த காலத்து பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுறது ஈசி, ஆனா காதலிக்க வெக்கிறது ரொம்ப கஷ்டம்” இதான் பசங்களோட இப்போதைய ஸ்டேட்டஸ். அழகா இருந்தா போதும், பைக் வெச்சிருந்தா போதும் உடனே ஓகே சொல்லிடுவாங்க’ன்னு பசங்க நினச்சா அது ரொம்ப தப்பு. இந்த காலத்து பொண்ணுங்க ரொம்பவே உஷார். “அப்புறம் என்ன தாண்டா பண்ணனும்?”, வெயிட் வெயிட். நீங்க இன்னும் எவ்வளவோ பண்ண வேண்டி இருக்கு பாஸ். உடனே ரொம்ப பயந்துடாதீங்க....




விளையாட்டான காரணங்களுக்காக தயவுசெஞ்சு காதலை ஆரம்பிக்காதீங்க. எதிர்காலத்துல இவளுக்கு தான் தோசை சுட்டு தர போறோம்’ன்னு உங்க மூளை சொல்லும், மனசு “ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி” மாதிரி அவங்க பேர சொல்லிகிட்டே இருக்கும். அப்போ தான் முடிவு பண்ணனும் அந்த பொண்ணு தான் உங்க காதலி’ன்னு.
உங்களுக்கு ஒரு பொண்ண பிடிச்சிட்டா, மொதல்ல நீங்க அவங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும், இம்ப்ரெஸ் பண்ணனும். உங்க லுக் தான் அவங்களுக்கு ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன். மஞ்ச கலர், ரோஸ் கலர், கிளிப்பச்சை கலர் இந்த மாதிரியெல்லாம் சட்டை போட்டா அந்த பொண்ணு இல்ல, வேற எந்த பொண்ணும் உங்கள லவ்’வாது. நீங்க கருப்பு செவப்பு, இதல்லாம் பொண்ணுங்களுக்கு முக்கியம் இல்ல. பர்சனாலிட்டியா இருக்கணும் அவ்ளோதான்.
அடுத்ததா அவங்கள ஈர்க்க, உங்க நடத்தை(Behavior) நல்லா இருக்கணும். கண்ணு தெரியாத பாட்டிங்களுக்கு ரோடு க்ராஸ் பண்ணி விடுறது, குழந்தைங்களோட விளையாடுறது அப்புறம் கோவில்ல அணைய போற விளக்க அணையாம கை வெச்சு தடுக்கிறது’ன்னு குஷி’லையே நீங்க நிறைய பாத்திருப்பிங்க அதுல ஏதாச்சும் ட்ரை பண்ணனும்.
இதல்லாம் பண்ணதுமே, அவங்க இம்ப்ரெஸ் ஆகிருப்பாங்க’ன்னு நெனச்சு உடனே போய் ஹாய், ஹல்லோ சொல்லி அடுத்த நிமிஷமே நம்பர் கேட்டா அப்புறம் அம்புட்டு தான். பொறுமை வேணும் பிரதர். மொதல்ல அவங்கள கண்ணுக்கு நேரா சந்திக்கணும் (தூரத்துல இருந்து தான்), லேசா ஒரு புன்னகை. கொஞ்ச நாளைக்கு இது போதும். அப்புறம் மெதுவா ஹாய் ஹல்லோ’ன்னு ஸ்டார்ட் பண்ணுங்க. எந்த காரணத்துக்காகவும் நம்பர் கேட்டுடாதீங்க.



பொண்ணுங்க’ன்னாலே பிடிக்காது, அலர்ஜி மாதிரி நடந்துக்கங்க. அவங்கதான் உங்க ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரண்ட்’ன்னு அவங்க நம்பனும். அப்ப தான் அவங்களா உங்க கிட்ட க்ளோஸ்’ஸா வருவாங்க. (பின்னாடி அவசரத்துல ஏதாச்சும் தப்பா கேட்டுட்டாலும், இதையே சாக்கா சொல்லிடலாம்,எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா?)

அவங்க உங்ககிட்ட சகஜமா பேசத் தொடங்கனுதுமே உடனே அவங்களோட தோழிங்ககிட்ட நட்பாக ட்ரை பண்ணாதீங்க. பத்தோட பதினொண்ணா இருக்கிறது எந்த பொண்ணுக்குமே பிடிக்காது. அவங்க தோழிங்க கிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருங்க. இதுவே உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயத்த ஏற்படுத்தும்,.

ஒரு முக்கியமான விஷயம், தனக்கு வரப்போறவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது பொண்ணுங்க இயல்பு. அப்படியே உங்களுக்கு கெட்ட பழக்கம் ஏதாவது இருந்தாலும் அவங்க சொல்லி நீங்க அதை நிறுத்திக்கிறதா காட்டிக்கணும், முடிஞ்சா நிறுத்திக்கணும்.





திறமைசாலியா இருந்தா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காகவாவது கஷ்டப்பட்டு கிளாஸ் பர்ஸ்ட் எடுத்துடுங்க. கவிதை, கதை எழுத முடிஞ்சாலும் ஓகே. அதுக்காக தெரியாத ஒரு விஷயத்த தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது.

அப்பப்போ அவங்கள சீண்டிப் பார்க்கணும், அவங்க ரசிக்கும்படியா கிண்டல் பண்ணனும்.  எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசணும். கொஞ்சம் பொறுப்பான பையனா நடந்துக்கணும்.
       
பொண்ணுங்களுக்கு அழகு, பணம் இதையெல்லாம் விட ரொம்ப முக்கியம் அவங்க மேல நீங்க காட்டுற அக்கறை(Care). அவங்க பிறந்தநாளை எக்காரணம் கொண்டும் நீங்க மறந்துட கூடாது. அப்புறம் அவங்க அப்பாவோ, HOD’யோ திட்டிட்டாலோ, இல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ்’குள்ள எதாச்சும் சண்டை வந்துட்டாலோ நீங்க தான் ஆறுதலா இருக்கணும்.

நீங்க எவ்ளோ பிசியான ஆளா இருந்தாலும் அவங்க கூட நிறைய நேரம் செலவிடனும். சின்னச் சின்ன கிஃப்ட், சாக்லேட் வாங்கிக் கொடுக்கணும். விட்டுக்கொடுக்கணும், சில சமயங்கள்ல விட்டுப் பிடிக்கணும். அதுதான் அவங்களுக்குள்ள ஒரு “இது” வர காரணமா இருக்கும்.  

அவங்களுக்குள்ள ஒரு “இது” வந்தது உங்களுக்கு தெரிஞ்சதுமே, உடனே உங்களுக்குள்ளேயும் “அது” இருக்குன்னு சொல்லிடாதீங்க. அத சொல்லிட்டீங்கன்னா அப்புறம் லைஃப்ல ஒரு கிக் இருக்காது. அவங்கள சொல்ல வைக்கணும். அதுதான் கிக்.

இவ்ளோ க்ளோஸ் ஆகிட்டீங்கன்னா அப்புறம் நீங்க செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அவங்க Possessiveness ஐ சீண்டி பார்க்கணும்.
ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் வந்ததுக்கு அப்புறமா, ஒருவேளை நீங்க ப்ரோப்போஸ் பண்ணி அவங்க மறுத்தாலும், உங்க நட்பு தொடரும்’ங்கற ஒரு நம்பிக்கையான ஸ்டேஜ்’க்கு வந்ததுக்கு அப்புறமா, கொஞ்சநாள் அவங்களா சொல்லுற வரை வெயிட் பண்ணுங்க. இல்லையா ஒரு நல்ல நாள் குறிச்சுகிட்டு, ஒரு நல்ல கிப்ட் வாங்கிட்டு “நீ அழகா இல்ல, எனக்கு உன்ன புடிக்கல, ஆனா இதல்லாம் நடந்துடுமோ’ன்னு பயமா இருக்கு’ன்னு” இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லி தகிரியமா ப்ரோப்போஸ் பண்ணிடுங்க. ஒருவேளை அவங்க மறுத்தாலும் உங்க உறவு/நட்பு தொடரும். காலப்போக்கில் அவங்களே ஓகே சொல்லவும் வாய்ப்பிருக்கு.





நீங்க இவ்வளவு பண்ணினாலும், நேர்மையா இருந்தா மட்டுமே உங்க காதல் ஜெயிக்கும். உங்க நேர்மை காதல்ல ரொம்ப முக்கியம்.

இதப் படிச்சுட்டு ட்ரை பண்ண போறவங்களுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட். “ஆணியே புடுங்க வேண்டாம்”ன்னு சொல்லுறவங்களுக்கு டபுள் “ஆல் தி பெஸ்ட்.


ஒரு பையனை காதலிக்க வைப்பது எப்படி? (இது பொண்ணுங்களுக்கு)

உங்களுக்கு ஒரு பையனை பிடிச்சிருச்சா? நீங்க மேலே சொன்ன மாதிரி அவ்ளோ கஷ்டப் பட தேவை இல்ல. உங்க வேளை ரொம்ப சிம்பிள்.



ஓரக்கண்ணால பார்த்து, லைட்டா கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க. அவ்ளோ தான். அங்க “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்”ன்னு  பேக்கிரவுண்ட் மீஜிக் ஸ்டார்ட் ஆகிருக்கும்.

 உங்களுக்கும் ஒரு ஆல் தி பெஸ்ட்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad