Ovvoru friendum theva machan....
பள்ளி, கல்லூரி கால நட்புகள், படிப்பிற்கு பின் சிலவருடங்களில் மங்கி , மறைந்து/ மறந்து போய்விடுகிறது.தற்போது ஆர்குட், ஆன் லைன் சாட், இமெயில்லில் அவ்வப்போது 'ஹாய்' ஆவதுசொல்லிக்கொள்ள முடிகிறது.
இத்தகைய தொடர்பு கூட இல்லாமல், சில வருடங்கள் தொடர்பு அற்று போன நட்பினை ஏதேச்சையாக சந்திக்க நேரிடும் போது, ஆண்கள் தன் சக ஆண் நண்பனிடம் முன்பு நட்பு நெருக்கதிலிருந்த காலத்தில் பழகியது போல் ஒரளவுக்காவது பேசி பழகிக்கொள்ள முடியும். ஆனால், பெண் நட்பினை அவ்வாறு சந்திக்கும் தருணங்களில் பெரும்பாலும் அப்பெண்கள் திருமணமாகி, கணவன் - குழந்தை என குடும்ப பெண்ணாகியிருப்பர், அப்போதும் அவரிடம் அதே நட்போடு பேச முடியுமா? சந்திப்பில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்னென்ன பேசலாம், எவற்றை பேசாமல் தவிர்ப்பது நல்லது என்பதை பற்றி என் கருத்துக்கள்...
எவ்வளவுதான் கலகலப்பாக பேசிப்பழகும்
பெண்ணாக
இருந்தாலும்,
திருமணத்திற்கு பின்
பெண்கள்
தங்களுக்கென்று ஒரு
வரைமுறையை
நட்பு
வட்டாரத்தில்
வைத்திருப்பர். அது அவரது குடும்ப
சூழ்நிலை,
மற்றும்
அவளது
கணவரின்
இயல்பை
பொறுத்து
அமையும்.
இந்த
புது
கோட்பாட்டுடன் இருக்கும்
உங்கள்
தோழியின்
நிலையை
உணராமல்,
முன்பு
பேசிப்பழகிய
அதே
குறும்பு
கேலிகளுடன்
பேச
முனைவது
நல்லதல்ல. அதிலும்
முக்கியமாக
அவரது
கணவரின்
தன்மை
தெரியாமல்
அவருக்கு
முன்பாகவே
கல்லூரி
கலாட்டாக்களை
பேசி
உங்கள்
தோழியை
வம்பில்
மாட்டி
விடாதிருங்கள்.
அவரது கணவரையும் உரையாடலில்
ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
தன்
கணவனிடம்
தன்
நண்பன்
அதிகம்
பேசவேண்டும்
என
பெரும்பாலான
பெண்கள்
விரும்புவர்.
கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு ," இவளை
கட்டிகிட்டு,
வசமா
இவ
கிட்ட
மாட்டிக்கிட்டீங்க" என்று தோழியின் கணவரிடம்
போட்டு
கொடுக்காதீர்கள். அதே
சமயம்,
உங்கள்
தோழியின்
அருமை
பெருமைகளையும் அளவுக்கு
அதிகமாக
புகழ்ந்து
தள்ளி
அவரது
கணவருக்கு
புகைச்சல்
உண்டு
பண்ணிடாதீங்க.
நட்பில்
தொடர்பு
விட்டுப்போன
இடைப்பட்டக்
காலத்தில்
எப்படி
எல்லாம்
'மிஸ்'
பண்ணினீங்க
உங்கள்
தோழியை
என்றெல்லாம்
சொல்ல
வேண்டிய
அவசியமில்லை.
உங்கள் தோழியின் மணவாழ்வில்
விரிசல்
இருப்பின்,
அதை
உங்களிடம்
தனிமையில்
அவர்
தெரிவித்தால்,
ஆலோசனை
கூறுங்கள்,
எந்த
உதவி
செய்வதாயினும் அவரது
கணவரின்
கவனத்திற்கு
கொண்டு
வருவது
சிறந்தது.
அவரது
கணவன்
மேல்
தவறு
இருப்பினும்
, அதை
மிகைப்படுத்தி பேசாமல்,
பொதுவான
குடும்ப
நண்பர்கள்
மூலம்
பிரச்சனையை
தீர்க்க
முயலுங்கள். உங்கள்
பங்களிப்பை
தனித்து
செய்வது
பாராட்டுக்குரியது அல்ல.