திருமணம் ஆக போகுதா உங்களுக்கு?? இதை வாசிங்க....
திருமணம் சீக்ரெட்ஸ்
திருமணம் என்பது ஆண், பெண் மட்டும் இணைவதல்ல. இரண்டு குடும்பங்களும் சேர்ந்தே இணைவதுதான் திருமணம்.
இருபாலினருக்கும் அவரது பெற்றோரும் அவர்களது சார்பில் அறிவுரைகளைக் கூறி தயார்
செய்வது நல்லதோர் உறவின் தொடக்கமாகும். "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு
வழக்கமிருக்கும்.
ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ‘ப்ரீ
மெரைட்டல் கவுன்சலிங்’ எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்
மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம்
வர மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே...!!
1. காதலை விட மரியாதைக்கு அதிக
முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும்.
2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி
அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும்.
3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை
அளிக்க வேண்டும்.
4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில்
கூட அன்பு அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல.
5. உன் சம்பளம் ‘உனக்கு, எனக்கு’ எனப் பிரித்துக் கொள்ளாமல் ‘நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக்
கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்து கொள்கிறாயா?’ என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம்.
6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த
முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல்.
7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள்.
8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட
தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும்.
9. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ்
குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்சனை பெரிதாகாமலும் தடுக்க முடியும்.
10. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும்
தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
11. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
12. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான
மதிப்பை தரும்.
13. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச்
செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள்
போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது
இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது.
14. திருமணத்துக்கு முன் பழகும் போதே
இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணம் அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற
மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல்
இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய
வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.
15. வாழ்க்கை முறை, மனபக்குவம், பிரச்சனைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம்.
16. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக்
கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும். ஆரோக்கியமான இடைவெளியை
அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்சனைகளில்
வளைந்து கொடுங்கள்.
17. எந்தத் தருணத்திலும் துணையின்றிச்
செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம்.