ஜி வி பிரகாஷ் - தனுஷ் இடையிலான மோதல் வலுக்கிறது !
ஜி வி பிரகாஷ் நடிகருக்கும், தனுஷ் நடிகருக்கும் இடையிலான மோதல் பெருசாயிகிட்டே போகிறது. ஜி வி பிரகாஷ்க்கு நயன்தாராவுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்கிற ஆசையில் தன் சம்பளத்தைகூட குறைத்துக் கொண்டு எப்படியாவது நயன்தாராவை ஒப்பந்தம் பண்ணுங்கன்னு சொல்லியிருந்தாராம். தயாரிப்பாளர் தாராவை அணுக அவரும் ஓகே சொல்லியிருந்ததாக பேச்சு. இடையில் புகுந்த தனுஷ், தாராவிடம் எதைஎதையோ சொல்லி படத்திலிருந்து விலக வச்சுட்டாராம். தனுஷ்க்கும், ஜி வி பிரகாஷ்க்கும் எதுலேருந்த முட்டல் மோதல் ஆரம்பிச்சிதுன்னு தெரியல... ஆனால் அது இப்போது பெருசா வளர்ந்திருக்குறது மட்டும் தெரியுது. யங் ஹீரோக்களால பிரகாஷ் பண்ணுற அட்ராசிட்டிகளை தாங்க முடியலை என்று பேசி கொள்கிறார்கள்.