மருத்துவமனையில் ரஜினி, அலைமோதிய கூட்டம், ஒரு மருத்துவரின் சுவாரஸ்ய அனுபவம்
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பினும் அவர் மிகவும் எளிமையானவர் என்பது நாம் யாவரும் அறிந்ததே. அதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக மருத்துவர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
ஒரு புதன்கிழமை காலை வேளையில் திரு. ரஜினிகாந்த் மருத்துவமனைக்குள் நுழைந்தார். சாதாரண வெள்ளை நிற ஜிப்பா அணிந்திருந்தவர் உடனே வழக்கமாக வரும் நோயாளிகள் போல் தனது பிரச்னைகள் குறித்து பேசத் துவங்கிவிட்டார்.
நான் மற்ற நோயாளிகளைப் போல் அல்லாமல் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக்கு இல்லாத வித்தியாசமான தொனியில் கேட்க, சட்டென யோசிக்காமல் , உங்களுக்கு சிறந்தது என தோன்றுவதைச் செய்யுங்கள் என்றார். மற்ற பிரபலங்கள் போல் இல்லாமல் மருத்துவர் மேல் அவருக்கிருக்கும் நம்பிக்கையை எனக்குத் தெரிவித்தார். இந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறான கூட்டம் அவர்களது விருப்ப நாயகனைக் காண அலைமோதியது. நோயாளிகள் பார்வையாளர்கள் மட்டுமின்றி, எங்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் கூட காத்திருந்தார்கள்.
எப்போதும் பிரபலங்கள் தங்களைப் பொதுமக்கள் மத்தியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வசதியாகவும், தனியாகவும் சந்திக்கவே பிரியப்படுவார்கள். மேலும் கூட்டத்தைத் தவிர்க்க பல குறிப்புகளும் எங்களுக்குக் கொடுப்பார்கள்.நாங்களும் அதைப் பின்பற்றுவோம். ஆனால் ரஜினிகாந்த் அப்படியில்லை. அவர் சென்று திரும்பும் போது வாசல் வரை மக்கள் கூட்டம். மேலும் வழி நெடுக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்ட மக்கள் என அனவைருக்கும் சற்றும் முகம் சுழிக்காமல் நின்று விருப்பத்தை நிறைவேற்றினார்.எங்கு சென்றாலும் உங்களைக் காண மக்கள் கூட்டம் இருக்கிறது அதை எப்படி நீங்கள் பொறுத்துக்கொள்கிறீர்கள் எனக் கேட்டபோது இதில் எனக்கு எந்த இடையூறும் இல்லை, எனக்கு இது சந்தோஷமே எனக் கூறினார். அப்படியே ஒரு அமைதி வேண்டுமானால் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று விடுவேன் எனக் கூறிவிட்டு என்னையும் சேர்த்து எல்லாருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்களின் அன்பில் தவறே இல்லை.
சூப்பர் ஸ்டார் என்ற மிகப்பெரிய பட்டத்தை மிக எளிமையாக வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் பிறப்பதில்லை அவர் உருவாக்கப்பட்டுள்ளார். நல்ல மனிதருக்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமாயின் அது சூப்பர் ஸ்டார்தான். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு தன்னை சரியாக வடிவமைத்து வைத்துள்ளார். எளிமையான பேச்சு, நடவடிக்கை, ஒன்று எனில் ஏற்றுக்கொள்ளும் நல்ல நல்ல பாத்திரங்கள் இன்னொரு பலம். எப்படி உங்கள் புகழும் உங்கள் மேலுள்ள ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது எனக் கேட்டபோது எல்லாம் கடவுளின் கருணை. எனக் கூறினார் என தன்னுடையஅனுபவத்தை ரஜினியின் சம்மதம் கேட்டு தனது ப்ளாகில் எழுதியுள்ளார் ஆச்சார்யா மருத்துவமனையின் பெண் மருத்துவர்.