நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !
இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக , எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என்று கேட்டால், யாரும் அதற்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவ ற்றில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. எனவே தினமும் உண்ணும் உணவு தான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது.அவ்வாறு அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை செய்து சாப்பிடுவது நன்மையை தரும் .
கீரைகள் :
கீரைகள் அதிகளவி ல் உணவில் சேர்த்துக் கொண்டால், அதில் உள் ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் பொருளும் இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இனிப்பு உருளைக்கிழங்கு :
இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங் கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸி டன்ட்டான பீட்டா கரோட் டீன் அதிகமாக உள்ளது.
தயிர் :
தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் தயிர் சாப்பிட்டா ல் செரிமான மண்டலமும் நன் கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும்.
இஞ்சி :
இஞ்சி வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
பாதாம் :
இதில் விட்டமின் இ, இரும்புசத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.
பேரீச்சம்பழம் :
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.