ஒவ்வொரு படத்திலும் ஒரு லட்சம் , விவசாயிகளுக்கு உதவும் கருணாகரன்
கலகலப்பு படம் மூலம் அறிமுகமாகி பீட்சா, சூது கவ்வும் , யாமிருக்க
பயமே, ஜிகர்தண்டா, என பல படங்களில் நடித்தவர் கருணாகரன். தற்சமயம்
கெத்து, கணிதன், உப்புக் கருவாடு, இறைவி என 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார்.
இப்போது அவர் ஒரு புது முடிவு எடுத்துள்ளார்.தனது சம்பளத்தில் ஒரு லட்சத்தை விவசாயிகளுக்குக் கொடுக்க இருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் ‘ ஒவ்வொரு படத்திற்கும் நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை போராடி வரும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்க இருக்கிறேன். அதை இன்றிலிருந்தே ஆரம்பிக்க உள்ளேன். என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.மகாராஷ்டிராவின் கிராமத்தில் உள்ள இறந்துபோன 113 விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து பன உதவிகள் கொடுத்தார் நானா படேகர்.
தமிழில் கருணாகரன் ஆரம்பித்துள்ளார். சமீப காலமாக விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நடிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது என்றே கூற வேண்டும். மேலும் கருணாகரன் போன்ற சிறிய சம்பளம் வாங்கும் நடிகர்களே முன்வரும் வேளையில் மற்ற பெரிய நடிகர்கள், பணக்காரர்களும் இது குறித்து யோசிக்கலாம்.