யுவராஜ் சிங்கின் புதிய காதலி
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
முதலில் யுவராஜ், பாலிவுட் நடிகையான கிம் சர்மாவை 4 வருடமாக தீவிரமாக காதலித்தார். இது பற்றி தனது அம்மாவிடம் யுவராஜ் கூற திருமணத்திற்கு அவர் மறுப்பு கூறிவிட்டார்.
தனது அம்மாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்காமல் யுவராஜும் காதலை விட்டுவிட்டார். இதைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் உடன் நெருக்கமாக இருந்தார்.
அவரும் யுவராஜின் பிறந்த நாளை கொண்டாட வெளிநாட்டிற்கு எல்லாம் பயணமாகினார். ஆனால் இவர்களது உறவும் சிக்கிரமாகவே முடிந்து விட்டது.
இதன் பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடும் போது அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா உடன் கிசுகிசுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மினிஷ்ஷா லம்பா, அனுஷா, அன்சால் குமார், பிரீத்தி ஜகான்ஜினி, ரியா சென் ஆகியோருடன் சேர்த்து யுவராஜ் பேசப்பட்டார்.
தற்போது யுவராஜ், நடிகை நிஹா துபியா உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் யுவராஜிக்கு புதிய காதலி கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் பஞ்சாபி நடிகை மண்டி டக்கரை காதலிப்பதாகவும், இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது 17வது வயதிலே படிப்பிற்காக லண்டன் சென்ற மண்டி டக்கர், அங்கு வொல்வர்ஹம்டனில் தான் வசித்தார். இதன் பிறகு பஞ்சாப் படங்களில் நடித்து பிரபலமானார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை இந்திய அணியில் இருந்து யுவராஜ் நீக்கப்பட்டதற்கு கூட மண்டி டக்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
யுவராஜின் இந்த காதல் எவ்வளவு காலம் என்பது தான் தெரியவில்லை.