சிவகார்த்திகேயனை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ஹன்சிகா
திருச்செந்தூரில் நடந்த, சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசும் போது, “ நான் 7 வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு வந்த போது, 3 நண்பர்களுடன்தான் வந்தேன். இப்போது இவ்வளவு பெரிய கூட்டமும், இவ்வளவு நண்பர்களும் கிடைத்திருக்கிறீர்கள்.
நானும் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த ஒரு மாணவன்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். படித்தப் படிப்பு சரியாக வராததால் இதைச் சமாளிக்க சினிமா துறைக்கு வந்துவிட்டேன்.
சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனாருடன், துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மிகப்பெரிய மனிதர்கள், பணிவுடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.
இந்நிகழ்வில் தொடர்ந்து ஹன்சிகா பேசுகையில், ‘‘நான் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கே கிடைத்து இருக்கும் இந்த வரவேற்பு ரொம்ப பிடித்து இருக்கிறது. அனைவருக்கும் என் வணக்கம். கமல்ஹாசனுடன் ஒரே மேடையில் இருந்து, இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமான விஷயம். எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் இப்படி இருக்க காரணமான உங்கள் எல்லோருக்கும் திரும்பவும் நன்றி.
தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தார் ஹன்சிகா, அப்போது, தனது பேச்சை மொழி பெயர்க்க வருமாறு சிவகார்த்திகேயனை அழைத்தார். அதற்கு ‘‘நீங்கள் பேசும் ஆங்கிலம் இங்கு எல்லோருக்கும் தெரியும், பேசுங்கள்’’ என்று சிவகார்த்திகேயன் சொல்லியும்,
விடாப்பிடியாக உங்களுக்கு எல்லாம் தெரியும், அதனால் மொழி பெயருங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஹன்சிகா பேசுவது எனக்கு புரிந்து, நான் பேசுவது உங்களுக்கு புரிய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நகைச்சுவையுடன் பேசி, ஹன்சிகா பேச்சை மொழி பெயர்த்துக் கூறினார்.