அப்பாவிடம் மோதும் மகள் !
கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள படம் ‘தூங்காவனம்’ . இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கியிருக்கிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது டப்பிங் பணிகள் மற்றும் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தை வெளியிட இருக்கின்றனர். அஜித் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் லட்சுமிமேனன், அஸ்வின், கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தல 56’ என்று அழைத்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை வெளியிட இருக்கின்றனர். இவ்விரு படங்களும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.