தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் தொடர் இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் தொடர் இந்திய
அணி அறிவிப்பு: குர்கீரத், அரவிந்த் அறிமுகம்
பெங்களூரு: தோனி தலைமையிலான இந்திய அணியில் குர்கீரத் சிங்(ஒருநாள்), ஸ்ரீநாத் அரவிந்த்(‘டுவென்டி–20’) ஆகிய இருவர் புதிதாக இடம் பெற்றனர். ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் அக்., 2ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் கட்டாக் (அக்., 5,), கோல்கட்டாவில் (அக்., 8) நடக்கவுள்ளன.
ஒருநாள் போட்டி:
ஐந்து ஒருநாள் போட்டிகள் முறையே கான்பூர் (அக்., 11), இந்துார் (அக்., 14), ராஜ்காட் (அக்., 18), சென்னை (அக்., 22), மும்பையில் (அக்., 25) நடக்கவுள்ளன.
தேர்வு கூட்டம்:
‘டுவென்டி–20’ மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிளுக்கான வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் பாட்டீல் தலைமையில் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. பின் 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
குர்கீரத் அறிமுகம்:
வழக்கம்போல அணியை தோனி வழிநடத்துகிறார். இதன் மூலம் கோஹ்லிக்கு தலைமைப்பொறுபு வழங்கப்படும் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரு நாள் அணியில், ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். சமீபத்திய வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் போட்டியில் இவர் 65 ரன்கள், 5 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றபடி தவான், கோஹ்லி, ரெய்னா, ரகானே, அஷ்வின், அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராயுடு, புவனேஷ்வர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கும் ரவிந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
அரவிந்த் அதிர்ஷ்டம்:
‘டுவென்டி–20’ அணியில் ஸ்ரீநாத் அரவிந்த் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். இவர், சமீபத்திய வங்கதேச ‘ஏ’ தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ரெய்னா, ராயுடு, ‘சீனியர்’ வீரர் ஹர்பஜன், அக்சர் படேல், மோகித் சர்மா, புவனேஷ்வர், உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
‘டுவென்டி–20’ அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன், அமித் மிஸ்ரா.
உமேஷ் வாய்ப்பு:
முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான அணியை பொறுத்தவரை 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘டுவென்டி–20’ அணியில் இருந்த ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜனுக்கு பதிலாக உமேஷ் யாதவ், குர்கீரத் சிங் இடம் பெறுகின்றனர். மற்றபடி ‘டுவென்டி–20’ அணியில் இடம் பெற்ற அதே வீரர்களே ஒருநாள் அணியிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஆதரவு தொடரும்