தடுமாறும் சிவ கார்த்திகேயன் !
சிவ கார்த்திகேயன் படம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நாற்பது கோடிக்கு வியாபாரம் பேசலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் மீண்டும் சிவ கார்த்திகேயன், சூரி காம்பினேஷன் எனும் போது கோடிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. ஆனால், ரஜினி முருகன் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
உத்தம வில்லனை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் ரஜினி முருகனை அடகு வைக்க வேண்டிய நிலை உருவானது. ரஜினி முருகனின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் வரும் பணத்தை தருவதாகக் கூறி வருண் மணியனிடமிருந்தும் அவர்கள் பல கோடிகள் வாங்கியதாக தகவல். இந்த கடன்களெல்லாம் பூதாகரமாக முன்னால் இருப்பதால் ரஜினி முருகனை வெளியிட திணறுகிறார்கள்.
ரஜினி முருகனை வெளியிடுவதாக கூறிய பல கம்பெனிகள் பின்வாங்கிய நிலையில், மதுரை அன்பு செழியன் படத்தை தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக வெளியிடுவதாக கூறப்பட்டது.