என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவுங்கள்- வரதட்சிணை வழக்கில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா உருக்கம்










வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக திரைப்பட நடிகர் கிருஷ்ணா மீது அவர்
மனைவி அளித்த புகாரின் பேரில், கோவை துடியலூர் காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்துள்ளனர். அலிபாபா, கழுகு உள்ளிட்ட படங்களில்
நடித்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி ஹேமலதா.

இவர் கோவை மாவட்டம் சிறுமுகை, பெத்திக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் . இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது தாயார் மதுபாலா, தந்தை குணசேகரன் ஆகியோர் மீது கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹேமலதா புகார் அளித்தார்.புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார், நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது, வரதட்சணை ஒழிப்பு மற்றும் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அதையொட்டி நடிகர் கிருஷ்ணா பத்திரிகையாளர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அக்கடித விவரம்.... அன்புள்ள பத்திரிகையாளர் நண்பர்களுக்கு, நான் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை எனக்கு அளவில்லா ஆதரவையும் அன்பையும் அளித்தவர்கள் நீங்கள். சற்றும் எதிர்பாராவிதமாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தின் படி இருவருக்குமிடையே சமரச பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட வீதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இவ்வழக்கினை உறிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன். இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் ஊடகத்திலுள்ள என் நண்பர்களும் மற்றவர்களும் என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவு வேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஏனென்றால் இது என்னை நேசிக்கும் பலரை பாதிக்கிறது. தொடரும் உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி.

கிருஷ்ணா
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad