இந்தியாவுக்கு பாக்., கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளை விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும் என பாக்., கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
யு.ஏ.இ.,யில் டிசம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா எந்த விளையாட்டு போட்டியிலும் பங்கேற்காது என பிசிசிஐ.,யின் செயலாளர் அனுரங் தாகூர் கடந்த மாதம் அறிவித்திருந்தார். மேலும் எல்லையில் தொடர்ந்து வரும் அத்துமீறிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும், பாக்., அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் அவர் விதித்தார்.
அதன் பிறகு பலமுறை முயற்சித்தும் இந்தியா தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (செப்.,7) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும். அதன் பிறகு எந்த நாடுடனும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்" என மிரட்டல் விடுத்துள்ளது.
பாக்.,ன் இந்த மிரட்டல் செய்திக்கு இந்தியா கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.