கூடுதல் நேரம் வேலை செய்தால் பக்கவாதம் தாக்கும் அபாயம்
வழக்கமான நேரத்தை விட வாரத்துக்கு 50 மணி நேரத்துக்கும் அதிகமாக
வேலை பார்ப்பவர்களுக்கு பக்கவாதம் இருதயக் கோளாறு உள்ளிட்ட
பாதிப்புகள் வ வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். ஐரோப்பா அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட
நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 6.30 லட்சம் பேரிடம் தொடர்ந்து
8.5 ஆண்டுகள் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன ஆய்வின் முடிவில்
வாரம் 35-40 மணி நேரம் வேலை செய்தவர்களை விட வாரம் 55 மணி
நேரத்துக்கு மேலாக வேலை பார்த்தவர்களுக்கு இதயம் தொடர்பான
பிரச்சனைகள் வருவது 13 சதவீதம் அதிகரித்திருந்தது எனினும் உடல்
உழைப்பு இல்லாமை அதிக அளவு மது அருந்துதல் மன அழுத்தம்
ஆகியவற்றாலும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்
என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது