உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய சரத்குமார்
சினிமாவில் மட்டும் தான் பக்கத்திற்கு பக்கம் வசனம் பேசுவார்கள், பொது
வாழ்க்கையில் சமூக அக்கறை சினிமாக் காரர்களுக்கு இல்லை என்ற
பொதுவான இணையக் கருத்தை சரத்குமார், கருணாகரன், விஷால்
உள்ளிட்டோர் உடைத்து வருகிறார்கள்.
நேற்று கருணாகரன் தனது ஒவ்வொரு படத்திலும் தான் வாங்கும்
சம்பளத்தில் ஒரு லட்சத்தை ஏழை விவசாயிகளுக்கு கொடுக்க இருப்பதாக
முடிவு எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார். அதே போல் விஷால் கேரளாவில்
தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினார்.
இப்போது சரத்குமார் நெல்லை செல்லும் வழியில் ஒருவர் விபத்துக்குள்ளாகி
உயிருக்கு போராடிய நிலையில் சுற்றி இருந்தவர்களை விலக்கிவிட்டு
விபத்துக்குள்ளான நபரை தன் காரிலேயே மருத்துவமனைக்கு கொண்டுச்
சென்று காப்பாற்றியிருக்கிறார்.
நிஜத்திலும் நாங்கள் ஹீரோக்கள் என ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து
வளர்ப்பது, சூர்யாவின் அகரம், அஜித் தன் வீட்டில் வேலை செய்வோருக்கு
வீடுகள் கட்டித் தருதல், மம்முட்டியின் மரம் நடும் சவால், விஜய் ரசிகர்களின்
குடும்பங்களுக்கு தொழில் செய்ய உதவுதல், ராகவா லாரன்ஸின் ஒரு கோடி
திட்டம் என சமூக அக்கறை கொஞ்சம் அதிகமாகி வருவது
பாராட்டுக்குரியவை.