புதிய எலான்ட்ரா!
கொரியாவில், புதிய 6வது ஜெனரேஷன் எலான்ட்ரா காரை அறிமுகப்படுத்தியது ஹுண்டாய் நிறுவனம். காரின் நிளம் மற்றும் அகலம், முறையே 20MM மற்றும் 25MM கூடியுள்ளதால், இடவசதி உயர்ந்துள்ளது என்கிறது ஹுண்டாய் நிறுவனம். காரின் இண்டிரியரில், ஃஸாப்ட் டச் மற்றும் உயர்தர பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. காக்பிட்டில் உள்ள டிஸ்பிளே யுனிட், டிரைவரை நோக்கி சாய்க்கப்பட்டு, டெஸ்போர்டு மற்றும் சென்டர் கன்ஸோலில் உள்ள பட்டன்கள், எளிதாக பயன்படுத்தும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.மேலும்,
காரின் ஸ்டியரிங் & ச்ஸ்பேன்ஷன், நல்ல ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமைக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்ஜின் விவரங்கள்: 2.0 Nu petrol: 147bhp, 18.35kgm; 1.6 GDi petrol: 130bhp, 16.41kgm; 1.6 VGT diesel: 134bhp, 30.59kgm. இவை 6 ஸ்பிட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக், 7 ஸ்பிட் DCT கியர்பாக்ஸை கொண்டுள்ளன. இந்தியாவிற்கு எப்போது இந்த கார் விற்பனைக்கு வரும் என்பது, போகப் போகத் தெரியும்.