கொழுக் மொழுக்கென்று குண்டாக இருப்பவர்கள் எவ்விதமான ஆடையை அணிவது?



கொழுக் மொழுக்கென்று குண்டாக இருப்பவரா நீங்கள்? இதை வாசியுங்கோ..





உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். 

எடுத்துக்காட்டாக குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள், எனக்கு நல்ல ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம். இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது.

காரணம் அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும். இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யுங்கள். காட்டன் வகை உடைகள் சிறந்தது. 

ஏங்க! எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!! என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்கு தெரியும், எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.  பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது. குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும். 

ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும். எனவே இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும். ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்க கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாக பார்த்துக்கொள்வது நல்லது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad