உனக்கென்ன வேணும் சொல்லு பட விமர்சனம்
வாரவாரம் பேய் படங்கள் வருவது தமிழ் சினிமா வில் தற்போதைய ட்ரண்ட் ஆகிவிட்டது. ஆனால் அதில் எத்தனை படங்கள் மக்களையும் சினிமா ரசிகர்களையும் மிரள வைக்கிறது என்பது தான் கேள்வி. இன்று வெளியாகியுள்ள உனக்கென்ன வேணும் சொல்லு திரைப்படம் உறவுகளை சார்ந்த ஒரு உணர்வுபூர்வமான பேய் படம்.கதை "இரண்டு குடும்பங்களுக்கு மத்தியில், அமானுஷ்ய சக்தி ஒன்று குறுக்கிட்டு அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த அமானுஷ்ய சக்தி, பிறந்த அன்றே இறந்துபோன ஒரு பெண் குழந்தையின் சக்தி. அந்தக் குழந்தைக்கும் சம்மந்தமில்லாத இன்னொரு குழந்தைக்கும் என்ன தொடர்பு? இதுதான் கதையின் கரு. அதேநேரம் லிவிங்-டுகெதர்(Living-together) வாழ்க்கையினால் பிறந்த ஒரு குழந்தை, எப்படியெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்படும் என்கிற கதையும், குழந்தைக்காக ஏங்கும் ஒரு தம்பதிகளின் கதையும் இதில் இருக்கிறது.நடிகர், நடிகைகள் பங்களிப்பு பேயாக வரும் அந்த சிறுமியின் தாயாக நடித்திருக்கிறார் ஜாக்லின் பிரகாஷ். தான் வாழ்கையில் செய்த தவறை எண்ணி வருத்தப்படுவதும், தான் கல்யாண வாழ்கையில் பிறந்த மகனை சிறுமியிடம் இருந்து காப்பாற்ற தவிப்பதும் அட நமக்கே பாவமா இருக்கே பா என்று தோன்றுகிறது.இவரது முன்னாள் காதலனாக நடித்திருக்கும் தீபக் ரமேஷ் முதலில் கதையில் ஒட்டவில்லை என்றாலும் கடைசி 20 நிமிடத்தில் கதைக்குள் ஒன்றாகிறார் நடிப்பில் தேர்ச்சி பெற வேண்டும் பாஸ். பேய் விரட்டும் மந்திரவாதியா இல்ல பாதிரியரா என்று புரியாமல் மைம் கோபி கதாபாத்திரம் செல்கிறது. அவருக்கு கொடுத்த கதாபர்த்திரத்தை அழகாக செய்திருக்கிறார், பேயாக வரும் அந்த சிறுமி அட நல்ல நடிப்பு, ஹிப்னோதெரபி(Hipnotherapy) முலம் அந்த குழந்தை உலகத்துக்கு சென்று அங்கு அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் குழந்தையின் ஏக்கத்தை உண்டாக்கிறது.