சரத்குமார் மகள் ரேயான் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்
சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார் - ராதிகா தம்பதியின் மகள் ரேயான், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் ரேயான் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தற்போது ராடன் டிவியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளராகவும், ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ரேயான்-அபிமன்யூ மிதுன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடக்கிறது.
நிச்சயதார்த்தத்தின்போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம்.