எலி படம் டைரக்டர் சதீஷ் குமாருடன் வைகை புயல் மோதல்
எலி தயாரிப்பாளரை வடிவேலு ஏமாற்றியதாகவும் போனில் மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகினஇந்த புகார் குறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, ''எலி படத்தை முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால் அவர் ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த தயாரிப்பாளர் சதீஷ்குமார், எலி படத்தை தயாரிக்க முன் வந்தார். படம் வெளியான பின், எதிர்பார்த்தபடி ஓடவில்லை, நஷ்டமாகிவிட்டது அடுத்து ஒரு படம் நடித்துக்கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார் சதீஷ்குமார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே படம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது, நான் மதுரையில் இருக்கிறேன். தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் நல்ல மனிதர் தான், அவர் இப்படி புகார் கொடுக்க தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி அவர்களை சமாளிக்க முற்பட்டிருக்கலாம். சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகரை எனக்கு தெரியாது. எலி படத்திற்கு எனக்கு பேசிய சம்பளத்தில், 2 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தார். மீதி சம்பளத்தை தரவில்லை. நஷ்டம் என்று கூறியதும், நானும் பாக்கி சம்பளத்தைக் கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற முறையில் இதைத்தான் நான் செய்ய முடியும். நண்பராக இருந்த தயாரிப்பாளர் திடீரென எதிரியைபோல் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.