விஷாலை வருத்தப்பட வைத்தாரா அஜித்
நடிகர் சங்கத் தேர்தல் ஒரு பக்கம் சூடுப் பறக்கத் துவங்கிவிட்டது. சரத்குமார் அணியும், விஷால் அணியும் அவரவர் பங்குக்கு ஆதரவுகளை திரட்டி வருகிறார்கள். அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஷால் அணி கமல், ரஜினி என மூத்த நடிகர்களை சந்தித்துப் பேசி விட்டனர். அதே போல் விஜய்யும் தன பங்குக்கு சரியானத் தேதி கொடுத்துவிட்டார் எனவும் அஜித் இன்னும் விஷால் அணியை சந்திக்க சரியான நேரம் ஒதுக்கவில்லை மௌனம் சாதிக்கிறார் என செய்திகள் வெளியாகிவருகின்றன. மேலும் இதனால் விஷால் தரப்பு வருத்தத்தில் உள்ளதாகவும் செய்திகள் பரவ , சம்மந்தப்பட்ட இரு தரப்பின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் விஷால் தரப்பில் அப்படி யாரும் கேட்கவில்லை என அஜித் வட்டத்திலும், நாங்கள் இன்னும் அப்படி யாரையும் பார்த்து சந்திப்புக் கோரி கேட்கவில்லை என விஷால் தரப்பிலும் சொல்லப்படுகிறது.மேலும் எப்படி இப்படி செய்திகள் பரவுகின்றன எனவும் கேட்கின்றனர்.
இந்நிலையில் வரும் 18ம் தேதி யார் பக்கம் யார் யார் வெற்றி பெறுவார் என தெரிந்துவிடும் என்கிறது கோலிவுட் தரப்பு. எல்லவற்றிற்கும் மேல் இப்போது நடந்துவரும் சந்திப்புகளும் ஒரு மரியாதை நிமித்தமே தவிர யாருக்கு யார் ஆதரவு என்பதெல்லாம் முடிவாகவில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளனர்.